நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 138,944 குடும்பங்களை சேர்ந்த 465,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கனமழை, மின்னல், திடீர், சுழல் காற்று, மண்சரிவு , மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன
குறிப்பாக வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய நிலை உருவாகியதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள மக்களின் வதிவிடங்கள், வணக்க ஸ்தலங்கள், பொது இடங்கள் என அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி வெள்ளக்காடானது.
இந்நிலையில் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
அதேவேளை அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் மற்றும் இதர தேவைகளை பல்வேறு அமைப்புக்களும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 19560 குடும்பங்களை சேர்ந்த 64621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 161வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 2113 குடும்பங்களை சேர்ந்த 7271பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் 4367 குடும்பங்களை சேர்ந்த 13836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 25வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2826 குடும்பங்களை சேர்ந்த 8724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 736 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
மன்னார் மாவட்டத்தில் 19811 குடும்பங்களை சேர்ந்த 2796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன 9097 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
வவுனியா மாவட்டத்தில் 1516குடும்பங்களை சேர்ந்த 5224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 4199குடும்பத்தை சேர்ந்த 12524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 80 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன 555 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 23561 குடும்பங்களை சேர்ந்த 73532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 73 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 2242 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் மழை வீழ்ச்சி இல்லாத நிலையில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பி வருகின்றனர்.
அதேவேளை சில பகுதிகளில் வெள்ளநீர் இன்றுவரை தேங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
மறுபுறம் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதி மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டன இன்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் எமது செய்தியாளர்களால் எடுக்கப்பட்ட ட்ரோன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,
கொடிகாமம் நாவலடி பிரதேசம்
ஊர்காவற்றுறை பிரதேசம்
யாழ் கல்லுண்டாய் வெளி பகுதி
யாழ் காக்கைதீவு பகுதி
யாழ் குருநகர் பகுதி
நல்லூர் பகுதி
யாழில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய நிலையின் ட்ரோன் காட்சிகள். நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 138,944 குடும்பங்களை சேர்ந்த 465,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, கனமழை, மின்னல், திடீர், சுழல் காற்று, மண்சரிவு , மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளனகுறிப்பாக வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய நிலை உருவாகியதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள மக்களின் வதிவிடங்கள், வணக்க ஸ்தலங்கள், பொது இடங்கள் என அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி வெள்ளக்காடானது.இந்நிலையில் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.அதேவேளை அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் மற்றும் இதர தேவைகளை பல்வேறு அமைப்புக்களும் வழங்கி வருகின்றனர்.அந்தவகையில், வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 19560 குடும்பங்களை சேர்ந்த 64621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 161வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 2113 குடும்பங்களை சேர்ந்த 7271பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் 4367 குடும்பங்களை சேர்ந்த 13836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 25வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளனமுல்லைத்தீவு மாவட்டத்தில் 2826 குடும்பங்களை சேர்ந்த 8724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 736 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மன்னார் மாவட்டத்தில் 19811 குடும்பங்களை சேர்ந்த 2796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன 9097 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் வவுனியா மாவட்டத்தில் 1516குடும்பங்களை சேர்ந்த 5224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 4199குடும்பத்தை சேர்ந்த 12524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 80 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன 555 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 23561 குடும்பங்களை சேர்ந்த 73532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 73 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 2242 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் மழை வீழ்ச்சி இல்லாத நிலையில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பி வருகின்றனர்.அதேவேளை சில பகுதிகளில் வெள்ளநீர் இன்றுவரை தேங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.மறுபுறம் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதி மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டன இன்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் எமது செய்தியாளர்களால் எடுக்கப்பட்ட ட்ரோன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,கொடிகாமம் நாவலடி பிரதேசம்ஊர்காவற்றுறை பிரதேசம்யாழ் கல்லுண்டாய் வெளி பகுதியாழ் காக்கைதீவு பகுதியாழ் குருநகர் பகுதிநல்லூர் பகுதி