• Apr 28 2024

யாழில் இளைஞர்களை குறிவைத்து போதை விருந்து...! விடுதிகளை முற்றுகையிட்டு போராடுவோம்...! சுகாஸ் எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Nov 14th 2023, 11:03 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும்(வெறியாட்டம்) ஒருபோதும் ஏற்கமுடியாது.

சம்பந்தப்பட்ட தனியார் விடுதியும் சமூகப் பொறுப்பற்றுச் செயற்படும் ஏனைய ஒருசில விடுதிகளும் தாம் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தகைய போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி குறித்த போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாம் எனவும் அவரது ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் இளைஞர்களை குறிவைத்து போதை விருந்து. விடுதிகளை முற்றுகையிட்டு போராடுவோம். சுகாஸ் எச்சரிக்கை.samugammedia யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் யாழில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும்(வெறியாட்டம்) ஒருபோதும் ஏற்கமுடியாது.சம்பந்தப்பட்ட தனியார் விடுதியும் சமூகப் பொறுப்பற்றுச் செயற்படும் ஏனைய ஒருசில விடுதிகளும் தாம் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.எதிர்காலத்தில் இத்தகைய போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி குறித்த போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாம் எனவும் அவரது ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement