• May 22 2024

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரியின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்! SamugamMedia

Chithra / Mar 1st 2023, 12:26 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரியின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம் SamugamMedia முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement