• Apr 25 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரி உட்பட ஐவர் தொடர்பில் நீதிமன்றின் அதிரடித் தீர்ப்பு

Chithra / Jan 12th 2023, 11:53 am
image

Advertisement

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளதாக, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

குறித்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரால் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரி உட்பட ஐவர் தொடர்பில் நீதிமன்றின் அதிரடித் தீர்ப்பு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்தநிலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளதாக, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.குறித்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரால் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement