• May 04 2024

தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாறவேண்டும்- அனுர வலியுறுத்து!

Sharmi / Jan 12th 2023, 11:49 am
image

Advertisement

இலங்கையிலுள்ள அரசியல் முறைமையில் உள்ள தவறுகள் காரணமாகவே உள்ளகப் பிரச்சனைகளை தீர்க்கமுடியாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும்.

ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும்.

எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல், தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாறவேண்டும்- அனுர வலியுறுத்து இலங்கையிலுள்ள அரசியல் முறைமையில் உள்ள தவறுகள் காரணமாகவே உள்ளகப் பிரச்சனைகளை தீர்க்கமுடியாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும்.ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும்.எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல், தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement