• May 17 2024

இலங்கையில் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்! samugammedia

Chithra / Apr 9th 2023, 7:00 am
image

Advertisement

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று இரவு உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

உலக மீட்பராக அவதரித்த ஜேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஸ்டிக்கப்படுகின்றது.

பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

இதன்போது ஜேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வினை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு வழிபாட்டினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


--

இந்த நிலையில் புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் உயிர்த்த ஞாயிறு  ஆராதனைகள் இடம்பெற்றன.

ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21இல் நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையடுத்து இம்முறையும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



இலங்கையில் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் samugammedia உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று இரவு உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.உலக மீட்பராக அவதரித்த ஜேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஸ்டிக்கப்படுகின்றது.பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.இதன்போது ஜேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வினை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.இதன்போது மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.உயிர்த்த ஞாயிறு வழிபாட்டினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.--இந்த நிலையில் புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் உயிர்த்த ஞாயிறு  ஆராதனைகள் இடம்பெற்றன.ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21இல் நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையடுத்து இம்முறையும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement