• Nov 24 2024

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர்..!samugammedia

mathuri / Jan 3rd 2024, 10:21 pm
image

வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள வெருகல் -மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று மாலை விஜயம் செய்துள்ளதோடு அவர்களோடு கலந்துரையாடியுள்ளார். 



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நேரடியாகச் சென்று கள நிலவரங்களை பார்வையிட்டதோடு  பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.



இதன் பின்னர் வெருகல் -இலங்கைத்துறை முகத்துவார வீதியின் தரைவழி போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கும் வெள்ள நிலவரங்களை பார்வையிட்டார். இதன்போது இயந்திர படகு மூலம் சென்ற அவர் மக்கள் பயணம் செய்வதை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்போருக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளோம்.அத்தோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் ழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர்.samugammedia வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள வெருகல் -மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று மாலை விஜயம் செய்துள்ளதோடு அவர்களோடு கலந்துரையாடியுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நேரடியாகச் சென்று கள நிலவரங்களை பார்வையிட்டதோடு  பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.இதன் பின்னர் வெருகல் -இலங்கைத்துறை முகத்துவார வீதியின் தரைவழி போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கும் வெள்ள நிலவரங்களை பார்வையிட்டார். இதன்போது இயந்திர படகு மூலம் சென்ற அவர் மக்கள் பயணம் செய்வதை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்போருக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளோம்.அத்தோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் ழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement