• May 03 2024

கொரோனா பரவல் எதிரொலி: பிரான்சிற்கு செல்வோர்க்கு இனி சிக்கல்?

Sharmi / Dec 31st 2022, 1:01 pm
image

Advertisement

சீனாவில் இருந்து பிரான்சுக்குள் வருவதற்கு கட்டாய கொவிட் 19 தொற்று பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது பெரும் கொவிட் 19 தொற்று பரவி வருகிறது. நாள் ஒன்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனாவில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் நாட்டுக்குத் திரும்ப முடியும் எனவும், எதிர்மறை முடிவுகளுடன் கூடிய கொவிட் 19 தொற்று அறிக்கை கொண்டிருந்தால் போதும் என அரசு நேற்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்துள்ளது.

முன்னதாக இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் மேற்படி அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கொரோனா பரவல் எதிரொலி: பிரான்சிற்கு செல்வோர்க்கு இனி சிக்கல் சீனாவில் இருந்து பிரான்சுக்குள் வருவதற்கு கட்டாய கொவிட் 19 தொற்று பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் தற்போது பெரும் கொவிட் 19 தொற்று பரவி வருகிறது. நாள் ஒன்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனாவில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் நாட்டுக்குத் திரும்ப முடியும் எனவும், எதிர்மறை முடிவுகளுடன் கூடிய கொவிட் 19 தொற்று அறிக்கை கொண்டிருந்தால் போதும் என அரசு நேற்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்துள்ளது.முன்னதாக இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் மேற்படி அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement