• Dec 24 2024

லண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகள் : ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் 'மகளி'

Tharmini / Dec 23rd 2024, 10:53 am
image

'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள 'மகளி' என்ற அல்பம் பாடல் வெளியிடப்படவுள்ளது.

மகளிரின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்தப் புரட்சிப் பாடலுக்கான வரிகளைப் பின்னணிப் பாடகரான எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார்.

கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு LONDON HAYES  பகுதியில் அமைந்துள்ள CRYSTAL HALL இல் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.

இந்தப் பாடலை ஜீ.வி.பிரகாஷின் தாயாரும், ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரைஹானா அறிமுகம் செய்து வைக்க, பிரிட்டன் எம்.பியான எமிலி டார்லிங்டன் வெளியிட்டு வைக்கவுள்ளார்.

இதற்கிடையில், இந்தப் பாடலை கடந்த 16ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் த வொய்ஸ் ஆர்ட்ஸ் குழுவினருடன் எமிலி டார்லிங்டன் எம்.பி. இணைந்து பாடியிருந்தார்.

இந்தப் பாடலைத் தயாரித்துள்ள 'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தினரிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்திய பிரபல தொலைக்காட்சிகளான விஜய் மற்றும் ஜீ தமிழ் நடத்தும் பாடல் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




லண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகள் : ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் 'மகளி' 'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள 'மகளி' என்ற அல்பம் பாடல் வெளியிடப்படவுள்ளது.மகளிரின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்தப் புரட்சிப் பாடலுக்கான வரிகளைப் பின்னணிப் பாடகரான எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.இந்தப் பாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு LONDON HAYES  பகுதியில் அமைந்துள்ள CRYSTAL HALL இல் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.இந்தப் பாடலை ஜீ.வி.பிரகாஷின் தாயாரும், ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரைஹானா அறிமுகம் செய்து வைக்க, பிரிட்டன் எம்.பியான எமிலி டார்லிங்டன் வெளியிட்டு வைக்கவுள்ளார்.இதற்கிடையில், இந்தப் பாடலை கடந்த 16ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் த வொய்ஸ் ஆர்ட்ஸ் குழுவினருடன் எமிலி டார்லிங்டன் எம்.பி. இணைந்து பாடியிருந்தார்.இந்தப் பாடலைத் தயாரித்துள்ள 'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தினரிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்திய பிரபல தொலைக்காட்சிகளான விஜய் மற்றும் ஜீ தமிழ் நடத்தும் பாடல் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement