• May 02 2024

ஈழத் தமிழினம் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்குண்டுள்ளது - இந்தியாவில் கதிர் தெரிவிப்பு.!

Sharmi / Feb 1st 2023, 11:52 am
image

Advertisement

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்திவாரமாக இருப்பது ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் புதுடில்லியில் இடம்பெற்ற தமிழர்களுக்கான சமூக நல அறக்கட்டளையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எந்தவிதமான அடிப்படைத் தீர்வுமின்றி நிரந்தரத் தீர்வுமின்றி அவல நிலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் 70 ஆண்டு காலமாக தங்களது உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை ரிதியாகவும் போராடுகின்ற இனமாகவே தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சந்தர்ப்ப்பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் தமிழ் இனம் சிக்குண்டு தவிக்கின்றது.  2009ம் ஆண்டு எமது ஆயதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக நாங்கள் உருவெடுத்திருக்கின்றோம்.

இறுதிக் கட்டத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் இனி அரசியற் போராட்டமாக மாற்றப்படும் விடயத்தைத் தலைவர் கூறியிருந்தார். அந்த சிந்தனைக்கு அமைவாக ஜனநாயகப் போராளிகள் ஆகிய நாம் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஈழத்தமிழர்களும் இந்திய தேசமும் எதிர்காலத்தில் நட்புறவுச் சமூகமாக இணைந்து தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கருதி நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை
இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

ஈழத் தமிழினம் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்குண்டுள்ளது - இந்தியாவில் கதிர் தெரிவிப்பு. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்திவாரமாக இருப்பது ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் புதுடில்லியில் இடம்பெற்ற தமிழர்களுக்கான சமூக நல அறக்கட்டளையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.எந்தவிதமான அடிப்படைத் தீர்வுமின்றி நிரந்தரத் தீர்வுமின்றி அவல நிலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் 70 ஆண்டு காலமாக தங்களது உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை ரிதியாகவும் போராடுகின்ற இனமாகவே தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.இன்று சந்தர்ப்ப்பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் தமிழ் இனம் சிக்குண்டு தவிக்கின்றது.  2009ம் ஆண்டு எமது ஆயதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக நாங்கள் உருவெடுத்திருக்கின்றோம். இறுதிக் கட்டத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் இனி அரசியற் போராட்டமாக மாற்றப்படும் விடயத்தைத் தலைவர் கூறியிருந்தார். அந்த சிந்தனைக்கு அமைவாக ஜனநாயகப் போராளிகள் ஆகிய நாம் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஈழத்தமிழர்களும் இந்திய தேசமும் எதிர்காலத்தில் நட்புறவுச் சமூகமாக இணைந்து தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கருதி நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement