ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி இன்றையதினம்(07) புத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் பஸ் நிலையம், தினச் சந்தை மற்றும் புத்தளம் நகரில் உள்ள கடைகள் , பொதுமக்கள் என அனைவருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முக்கியத்துவம், ரணில் விக்ரமசிங்கவை ஏன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என தெளிவுபடுத்தி "இயலும் ஸ்ரீலங்கா" துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஜமால்தீன் ஜௌசி, இணைப்புச் செயலாளர் அமீரலி ஆசிரியர் , ஊடகச் செயலாளர் நௌபர், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் நகுலன், பாராளுமன்ற உறுப்பினரின் இளைஞர் அமைப்பாளர் அகீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான றிசான் மற்றும் பாஹிம், பயியாஜ், சஜாத் உஉட்பட ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அனுபவமில்லாதவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்துவிட்டு, மக்கள்தான் இறுதியில் கஷ்டப்பட வேண்டும் எனவும் அரசியலில் நன்கு முதிர்ச்சி பெற்ற ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியானால் நாடு நல்ல முன்னேற்றத்தை அடையும் என பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இதன்போது கருத்து தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் இப்போது மாயாஜால வித்தைகளை காண்பித்து வருகிறார்கள். இது தேர்தல் காலங்களில் வழமையான விடயமாகும். இதனை மக்கள் ஒருபோதும் நம்பி ஏமாந்துவிடக் கூடாது. ரணில் விக்ரமசிங்கவைத் தவிர, வேறு யாராலும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை புத்தளம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போது, ரணில்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் எனவும் ரணிலுக்குதான் வாக்களிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறிவருகிறார்கள் என்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் தெரிவித்தார்.
ரணிலுக்கு ஆதரவாக புத்தளத்தில் தேர்தல் பிரச்சாரம். ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி இன்றையதினம்(07) புத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.புத்தளம் பஸ் நிலையம், தினச் சந்தை மற்றும் புத்தளம் நகரில் உள்ள கடைகள் , பொதுமக்கள் என அனைவருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முக்கியத்துவம், ரணில் விக்ரமசிங்கவை ஏன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என தெளிவுபடுத்தி "இயலும் ஸ்ரீலங்கா" துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஜமால்தீன் ஜௌசி, இணைப்புச் செயலாளர் அமீரலி ஆசிரியர் , ஊடகச் செயலாளர் நௌபர், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் நகுலன், பாராளுமன்ற உறுப்பினரின் இளைஞர் அமைப்பாளர் அகீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான றிசான் மற்றும் பாஹிம், பயியாஜ், சஜாத் உஉட்பட ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.அனுபவமில்லாதவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்துவிட்டு, மக்கள்தான் இறுதியில் கஷ்டப்பட வேண்டும் எனவும் அரசியலில் நன்கு முதிர்ச்சி பெற்ற ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியானால் நாடு நல்ல முன்னேற்றத்தை அடையும் என பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இதன்போது கருத்து தெரிவித்தார்.அரசியல்வாதிகள் இப்போது மாயாஜால வித்தைகளை காண்பித்து வருகிறார்கள். இது தேர்தல் காலங்களில் வழமையான விடயமாகும். இதனை மக்கள் ஒருபோதும் நம்பி ஏமாந்துவிடக் கூடாது. ரணில் விக்ரமசிங்கவைத் தவிர, வேறு யாராலும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை புத்தளம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போது, ரணில்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் எனவும் ரணிலுக்குதான் வாக்களிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறிவருகிறார்கள் என்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் தெரிவித்தார்.