இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.
அவர் அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியதால் அது தொடர்பில் அவர் தமது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கிய முன்னைய தலைமுறையினரின் முன்னுதாரணத்தை கொண்டு, தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையிலேயே அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட மின்சார சபை பேச்சாளர் இராஜினாமா. இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.அவர் அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியதால் அது தொடர்பில் அவர் தமது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளார்.கல்வியில் சிறந்து விளங்கிய முன்னைய தலைமுறையினரின் முன்னுதாரணத்தை கொண்டு, தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.இது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையிலேயே அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது