• Nov 23 2024

கிண்ணியாவில் யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

Tamil nila / Oct 23rd 2024, 7:17 pm
image

யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. யானைகள் மனிதனைத் தாக்காமல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதையும் தாண்டி யானைகள் தனது கைங்கரியத்தை காட்டிக் கொண்டே வருகின்றது.

திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி வானாறு எனும் பகுதியில் இச்சம்பவம் இரவு நடந்தது.


இவ்வாறு ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடு உட்பட தென்னை மாமரம் ,முதலான பயன் தரும் மரங்களை அழித்து துவம்சம் செய்துள்ளன அத்துடன் நெல் முதலான வற்றையும் நாசப்படுத்தி உள்ளதாகத்  தெரிவிக்கின்றனர்.


இதனால் யானை தொல்லை காரணமாக பயந்து பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எமது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தி விட்டது. இரவு கரண்ட் இல்லாத சமயத்தில் யானை வந்து எல்லாப்  பயிர்களையும் அழித்துவிட்டது தினமும் வந்து  நாசப்படுத்துகிறது.

வீடு,மாமரம்,தென்னை மரம் முதலானவற்றை அழித்துள்ளது விதை நெல் மாட்டுத்தீனி முதலானற்றையும் அழித்து வீட்டையும் உடைத்து விட்டது.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் யானையை கட்டுப்படுத்தி தர வேண்டும். யானை தொல்லையினால் தூங்க முடியவில்லை.

என்னிடம் பல தென்னை மரங்கள் உள்ளன. இதனைப் பாதுகாக்க  அரசாங்கம் யானைகளை கட்டுப்படுத்தி தரவேண்டும்.

யானை தொல்லை தாங்க முடியாது நெல்,மாட்டுத் தீனி வீடு,தென்னை மரம் எல்லாவற்றையும் அழித்து விட்டது.


பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயந்து பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவில் யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. யானைகள் மனிதனைத் தாக்காமல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதையும் தாண்டி யானைகள் தனது கைங்கரியத்தை காட்டிக் கொண்டே வருகின்றது.திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி வானாறு எனும் பகுதியில் இச்சம்பவம் இரவு நடந்தது.இவ்வாறு ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடு உட்பட தென்னை மாமரம் ,முதலான பயன் தரும் மரங்களை அழித்து துவம்சம் செய்துள்ளன அத்துடன் நெல் முதலான வற்றையும் நாசப்படுத்தி உள்ளதாகத்  தெரிவிக்கின்றனர்.இதனால் யானை தொல்லை காரணமாக பயந்து பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எமது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தி விட்டது. இரவு கரண்ட் இல்லாத சமயத்தில் யானை வந்து எல்லாப்  பயிர்களையும் அழித்துவிட்டது தினமும் வந்து  நாசப்படுத்துகிறது.வீடு,மாமரம்,தென்னை மரம் முதலானவற்றை அழித்துள்ளது விதை நெல் மாட்டுத்தீனி முதலானற்றையும் அழித்து வீட்டையும் உடைத்து விட்டது.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் யானையை கட்டுப்படுத்தி தர வேண்டும். யானை தொல்லையினால் தூங்க முடியவில்லை.என்னிடம் பல தென்னை மரங்கள் உள்ளன. இதனைப் பாதுகாக்க  அரசாங்கம் யானைகளை கட்டுப்படுத்தி தரவேண்டும்.யானை தொல்லை தாங்க முடியாது நெல்,மாட்டுத் தீனி வீடு,தென்னை மரம் எல்லாவற்றையும் அழித்து விட்டது.பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயந்து பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement