கடந்த 11 ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் தேற்றாத்தீவு பகுதியை கடந்து களுதாவளை, களுவாஞ்சிக்குடி ஆற்றங்கரை ஓரங்களை நோக்கி காட்டு யானைகள் நகர்வதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த காட்டு யானைகளை துரத்தும் பணியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசி திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இக்காட்டு யானைகள் கூட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பயன் தரும் மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்துள்ளமை தமக்கு வேதனையளிப்பதாகவும் தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இரு வாரமாக வழிமாறி திரியும் காட்டுயானைகள்; விவசாய நிலங்களை அழித்து அட்டகாசம் கடந்த 11 ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் தேற்றாத்தீவு பகுதியை கடந்து களுதாவளை, களுவாஞ்சிக்குடி ஆற்றங்கரை ஓரங்களை நோக்கி காட்டு யானைகள் நகர்வதையும் அவதானிக்க முடிந்துள்ளது. இந்த காட்டு யானைகளை துரத்தும் பணியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசி திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இக்காட்டு யானைகள் கூட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பயன் தரும் மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்துள்ளமை தமக்கு வேதனையளிப்பதாகவும் தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.