• Nov 23 2024

அரச சொத்துக்கள் குறித்து முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Chithra / Nov 3rd 2024, 8:45 am
image

 

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளால் இடம்பெறும் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றங்களையும் முறையிட முடியும்.

மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம்பெறும் பல்வேறு குற்றங்கள், மோசடிகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்த முடியும்.

தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அரச சொத்துக்கள் குறித்து முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்  அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளால் இடம்பெறும் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றங்களையும் முறையிட முடியும்.மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம்பெறும் பல்வேறு குற்றங்கள், மோசடிகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்த முடியும்.தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement