• Jan 16 2025

தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு இலங்கை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் - பிரதமர்

Chithra / Jan 9th 2025, 9:15 am
image

  

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்

விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வொன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்

குறித்த நிகழ்வில், பேராசிரியர் உதேனி பி. நவகமுவ விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கத்தின் 2025ம் ஆண்டுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார்

இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 

இலங்கையின் முன்னணி விஞ்ஞான அமைப்பான SLAAS ஐயாயிரத்திற்கும் அதிகமான அங்கத்தர்வகளைக் கொண்ட பல்வேறு வகையிலான மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். செல்வாக்குமிக்க மற்றும் பரந்தளவிலான இலங்கையின் விஞ்ஞான ரீதியிலான நிலப்பரப்பின் இருப்பிற்கு SLAAS நிதர்சனமான சான்றாக விளங்குகின்றது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தொடர் ஊக்குவிப்பினை வழங்கி வருவதுடன், எதிர்காலத்தில் உருவாகும் விஞ்ஞானிகள் உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான கருவிகள் மற்றும் அறிவையும் வழங்கி வருகின்றது.

இந்த சாதனையை நாம் கொண்டாடும் அதேநேரம், நாம் எமது சவால்களை அடையாளம் கண்டு

அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு துடிப்பான அறிவுத்திறன் கொண்ட சமூகம், வலுவான ஆய்வு மற்றும் அபிவிருத்தி உட்கட்டமைப்பு உட்பட இளம் ஆய்வாளர்களுக்கான வாய்ப்புக்களும் வழிகாட்டுதல்களும் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானதாகும்.

எவ்வாறாயினும், நாம் எமது சொந்த சூழ்நிலையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் எம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எமது ஆராய்ச்சி கலாசாரம் உண்மையில் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதியளிக்காது.

எமது ஆய்வாளர்கள் அதீத கருவிகளாக மாறுகின்றார்கள், எம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் அறிவு மீதான ஈர்ப்பு மற்றும் விருப்பத்தை விடவும் பிரச்சார திட்டங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்துகின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. விஞ்ஞான கல்வி மற்றும் ஆராச்சியானது கோட்பாடு மற்றும் முறையான கடினத்தமையை உறுதி செய்வதுடன், அது தாக்கம் மிக்கது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது எமது நாட்டிற்கு இன்றியமையாதது.

இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது.

தற்போது நாம் வகிக்கும் வகிபாகத்தை நினைத்து திருப்திக்கொள்ள முடியாது. இலங்கையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கான விரிவான அணுகுமுறையை எமது அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

எமது கொள்கை கட்டமைப்பு, குவாண்டம் லீப் தலைப்பு என்பவற்றின் ஊடாக முன்னணி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை வலியுறுத்துகிறது.

விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்தின் கேந்திர நிலையமாக இலங்கை இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்த கட்டமைப்பின் நோக்கமாகும். அத்துடன், எமது அரசாங்கம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை கட்டமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் பொருளாதார மீள் எழுச்சி மற்றும் தேசிய அபிவிருத்திக்கு முக்கியமான இயக்கிகளாக இருக்கும் விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதன் ஊடாக எமது அர்ப்பணிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்


தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு இலங்கை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் - பிரதமர்   ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வொன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்குறித்த நிகழ்வில், பேராசிரியர் உதேனி பி. நவகமுவ விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கத்தின் 2025ம் ஆண்டுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார்இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கையின் முன்னணி விஞ்ஞான அமைப்பான SLAAS ஐயாயிரத்திற்கும் அதிகமான அங்கத்தர்வகளைக் கொண்ட பல்வேறு வகையிலான மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். செல்வாக்குமிக்க மற்றும் பரந்தளவிலான இலங்கையின் விஞ்ஞான ரீதியிலான நிலப்பரப்பின் இருப்பிற்கு SLAAS நிதர்சனமான சான்றாக விளங்குகின்றது.விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தொடர் ஊக்குவிப்பினை வழங்கி வருவதுடன், எதிர்காலத்தில் உருவாகும் விஞ்ஞானிகள் உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான கருவிகள் மற்றும் அறிவையும் வழங்கி வருகின்றது.இந்த சாதனையை நாம் கொண்டாடும் அதேநேரம், நாம் எமது சவால்களை அடையாளம் கண்டுஅபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு துடிப்பான அறிவுத்திறன் கொண்ட சமூகம், வலுவான ஆய்வு மற்றும் அபிவிருத்தி உட்கட்டமைப்பு உட்பட இளம் ஆய்வாளர்களுக்கான வாய்ப்புக்களும் வழிகாட்டுதல்களும் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானதாகும்.எவ்வாறாயினும், நாம் எமது சொந்த சூழ்நிலையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் எம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எமது ஆராய்ச்சி கலாசாரம் உண்மையில் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதியளிக்காது.எமது ஆய்வாளர்கள் அதீத கருவிகளாக மாறுகின்றார்கள், எம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் அறிவு மீதான ஈர்ப்பு மற்றும் விருப்பத்தை விடவும் பிரச்சார திட்டங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்துகின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. விஞ்ஞான கல்வி மற்றும் ஆராச்சியானது கோட்பாடு மற்றும் முறையான கடினத்தமையை உறுதி செய்வதுடன், அது தாக்கம் மிக்கது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது எமது நாட்டிற்கு இன்றியமையாதது.இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது.தற்போது நாம் வகிக்கும் வகிபாகத்தை நினைத்து திருப்திக்கொள்ள முடியாது. இலங்கையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கான விரிவான அணுகுமுறையை எமது அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.எமது கொள்கை கட்டமைப்பு, குவாண்டம் லீப் தலைப்பு என்பவற்றின் ஊடாக முன்னணி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை வலியுறுத்துகிறது.விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்தின் கேந்திர நிலையமாக இலங்கை இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்த கட்டமைப்பின் நோக்கமாகும். அத்துடன், எமது அரசாங்கம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை கட்டமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.மேலும் பொருளாதார மீள் எழுச்சி மற்றும் தேசிய அபிவிருத்திக்கு முக்கியமான இயக்கிகளாக இருக்கும் விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதன் ஊடாக எமது அர்ப்பணிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement