• Feb 20 2025

புத்தாண்டை முன்னிட்டு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

Tharmini / Feb 17th 2025, 4:58 pm
image

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் பண்டிகைக் காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க, உணவுப் பொதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, டின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப் பொதியை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், இதனை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை முன்னிட்டு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் பண்டிகைக் காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க, உணவுப் பொதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று (17) நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, டின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப் பொதியை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், இதனை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement