• May 19 2024

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரம் - இந்திய புலனாய்வு அமைப்புகளின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம்! samugammedia

Chithra / Aug 22nd 2023, 10:25 am
image

Advertisement

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வு பிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம்  என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திரட்டுமாறும் எச்சரிக்கையாகயிருக்குமாறும்  உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சாத்தியம் என்ற இந்திய புலனாய்வு பிரிவினரின் எச்சரிக்கையை தொடர்ந்தே உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

குருந்தூர் ஆலய பகுதியினை உரிமை கொண்டாடுவதற்காக பௌத்த இந்து உணர்வுகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  உள்நாட்டு புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என  ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன இந்த வன்முறைகள் 2019 தேர்தலிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விட மோசமானவையாக காணப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கையை இந்திய பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரம் - இந்திய புலனாய்வு அமைப்புகளின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம் samugammedia குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வு பிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம்  என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.முல்லைத்தீவு குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திரட்டுமாறும் எச்சரிக்கையாகயிருக்குமாறும்  உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன என ஐலண்ட் தெரிவித்துள்ளது.குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சாத்தியம் என்ற இந்திய புலனாய்வு பிரிவினரின் எச்சரிக்கையை தொடர்ந்தே உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.குருந்தூர் ஆலய பகுதியினை உரிமை கொண்டாடுவதற்காக பௌத்த இந்து உணர்வுகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  உள்நாட்டு புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என  ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன இந்த வன்முறைகள் 2019 தேர்தலிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விட மோசமானவையாக காணப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கையை இந்திய பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement