இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்து விடகூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெங்களுரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள மிகப்பெரிய மக்கள் தொகை நாடாக இந்தியா உள்ளது. இது ஒரு முக்கோண உலகம், அதில் நாம் நமது பகுதியை கையாள்கிறோம்.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான நெருக்கடியான நிலைமை தோற்றுவித்துள்ளது.
இத்தகைய மோதல்கள் ஊடாக ஏற்பட கூடிய பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலின்மையை கருத்தில் கொள்ளவில்லை என்றால் பங்களாதேசத்திற்கு ஏற்பட்ட நிலைமை பாக்கிஸ்தானுக்கும் ஏற்படலாம்.
மறுபுறம் பாக்கிஸ்தானால் குண்டுவீசப்பட வாய்ப்புள்ள இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமா என்று அமெரிக்க முதலீட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இலங்கை உள்நாட்டு போரின் போது பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும்.
ஆனால் ஏனைய பகுதிகளிலும் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. எவ்வாறாயினும் மோதல் ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுத்து விடக்கூடாது. என்றார்.
உள்நாட்டு போரின் போதும் இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்தது ரணில் கருத்து இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்து விடகூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெங்களுரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள மிகப்பெரிய மக்கள் தொகை நாடாக இந்தியா உள்ளது. இது ஒரு முக்கோண உலகம், அதில் நாம் நமது பகுதியை கையாள்கிறோம்.இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான நெருக்கடியான நிலைமை தோற்றுவித்துள்ளது. இத்தகைய மோதல்கள் ஊடாக ஏற்பட கூடிய பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலின்மையை கருத்தில் கொள்ளவில்லை என்றால் பங்களாதேசத்திற்கு ஏற்பட்ட நிலைமை பாக்கிஸ்தானுக்கும் ஏற்படலாம்.மறுபுறம் பாக்கிஸ்தானால் குண்டுவீசப்பட வாய்ப்புள்ள இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமா என்று அமெரிக்க முதலீட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.எவ்வாறாயினும் இலங்கை உள்நாட்டு போரின் போது பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும்.ஆனால் ஏனைய பகுதிகளிலும் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. எவ்வாறாயினும் மோதல் ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுத்து விடக்கூடாது. என்றார்.