• May 21 2024

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கவில் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர்.! samugammedia

Sharmi / May 7th 2023, 10:25 am
image

Advertisement

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கசுன் சுமதிபாலவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியில் பலர், இணையவுள்ளதாக பாலித ரங்கே பண்டார நேற்று வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தின் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமரத்ன சுமதிபாலவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் அபிவிருத்தியை நோக்கி ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிஓயா பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கவில் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர். samugammedia வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.குறிப்பாக பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கசுன் சுமதிபாலவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியில் பலர், இணையவுள்ளதாக பாலித ரங்கே பண்டார நேற்று வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது தெரிவித்துள்ளார்.அத்துடன் வவுனியா மாவட்டத்தின் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமரத்ன சுமதிபாலவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் அபிவிருத்தியை நோக்கி ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை வெலிஓயா பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement