• Sep 17 2024

செய்தியாளர் சந்திப்பிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி மற்றும் அவரது தம்பி! samugammedia

Chithra / Apr 16th 2023, 9:04 am
image

Advertisement

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் கொலை வழக்கில், அதிக் அகமது, அஷ்ரஃப் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கொலை வழக்கின் சாட்சியான உமேஷ் பால் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்காக பிரயாக்ராஜ் இருவரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ஜான்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையால், அதிக் அகமதின் மகன் ஆசாத் என்கவுன்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த என்கவுன்டரில் ஆசாத்துடன் மற்றொரு துப்பாக்கிதாரியாக கூறப்படும் குலாம் என்பவரும் கொல்லப்பட்டார். ஆசாத், குலாம் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று நடந்தன.

அதிக் மற்றும் அஷ்ரஃப் படுகொலை செய்யப்பட்டது குறித்து உத்தர பிரதேச காவல்துறை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் சந்திப்பிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி மற்றும் அவரது தம்பி samugammedia உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் கொலை வழக்கில், அதிக் அகமது, அஷ்ரஃப் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கொலை வழக்கின் சாட்சியான உமேஷ் பால் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்காக பிரயாக்ராஜ் இருவரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.ஜான்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையால், அதிக் அகமதின் மகன் ஆசாத் என்கவுன்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த என்கவுன்டரில் ஆசாத்துடன் மற்றொரு துப்பாக்கிதாரியாக கூறப்படும் குலாம் என்பவரும் கொல்லப்பட்டார். ஆசாத், குலாம் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று நடந்தன.அதிக் மற்றும் அஷ்ரஃப் படுகொலை செய்யப்பட்டது குறித்து உத்தர பிரதேச காவல்துறை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement