• Nov 28 2024

யாழில் ஆரம்பமான சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் கண்காட்சியும், விற்பனையும்..!

Chithra / Dec 27th 2023, 1:53 pm
image

 

யாழ்ப்பாண வணிகர் கழகம், யாழ்ப்பாண இந்திய தூதகத்தின் இணைந்த  எற்பாட்டில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் யாழ்ப்பாண இந்திய கலாச்சார முன்றலில் யாழ்ப்பாண வணிகர் கழகம் தலைவர் ப. ஜெயசேகரம் தலைமையில் ஆரம்பமானது.

இதில் 130 உள்ளூர் சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களின் காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்துள்ளதுடன் விற்பனையும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக உள்ளூர் சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களின் கூடராங்களை திறந்துவைத்தார்

இவ் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, யாழ்ப்பாண பிரதேசசெயலாளர் எஸ்.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழகத்தினர் மற்றும் யாழ்ப்பாண இந்திய தூதகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ் கண்காட்சி விற்பனை 27,28,29 ஆகிய நாட்கள் இடம்பெறுவதுடன் இன்று மாலை மார்கழி இசை விழாவும் கலாச்சார நிகழ்வும் இடம்பெறவுள்ளது.



யாழில் ஆரம்பமான சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் கண்காட்சியும், விற்பனையும்.  யாழ்ப்பாண வணிகர் கழகம், யாழ்ப்பாண இந்திய தூதகத்தின் இணைந்த  எற்பாட்டில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் யாழ்ப்பாண இந்திய கலாச்சார முன்றலில் யாழ்ப்பாண வணிகர் கழகம் தலைவர் ப. ஜெயசேகரம் தலைமையில் ஆரம்பமானது.இதில் 130 உள்ளூர் சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களின் காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்துள்ளதுடன் விற்பனையும் இடம்பெற்றது.இவ் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக உள்ளூர் சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களின் கூடராங்களை திறந்துவைத்தார்இவ் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, யாழ்ப்பாண பிரதேசசெயலாளர் எஸ்.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழகத்தினர் மற்றும் யாழ்ப்பாண இந்திய தூதகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ் கண்காட்சி விற்பனை 27,28,29 ஆகிய நாட்கள் இடம்பெறுவதுடன் இன்று மாலை மார்கழி இசை விழாவும் கலாச்சார நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement