• May 19 2024

பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான திரிபோசா பொதிகள்! samugammedia

Chithra / Aug 29th 2023, 5:33 pm
image

Advertisement

கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட கஹபொல ரெகிதெல்வத்த பகுதியில் தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையத்திலிருந்து பத்து மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோசா பொதிகள் இன்று(29) விநியோகிக்கப்பட்டுள்ளதாக திரிபோசா பெற்ற தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

காலாவதியான திரிபோஷா பொதிகள் விநியோகித்ததாக கூறப்படும் குடும்ப சுகாதார சேவை அதிகாரியிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த திரிபோஷா பொதிகளை வரும் வியாழன் அன்று மீள கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கேட்ட போது, இது ஒரு தவறு. அதற்காக வருந்துகிறோம். விநியோகித்தவுடன் காலாவதியாகி விட்டது என்பது பெரிய விடயம். அன்றைய தினம் திரிபோஷா விநியோகம் செய்யப்பட்ட வீடுகளுக்கு தெரியப்படுத்தி மாற்றி புதிய திரிபோஷம் வழங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இது எழுத்துப்பிழையா அல்லது பழைய திரிபோஷாவா என்பதைச் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான திரிபோசா பொதிகள் samugammedia கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட கஹபொல ரெகிதெல்வத்த பகுதியில் தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையத்திலிருந்து பத்து மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோசா பொதிகள் இன்று(29) விநியோகிக்கப்பட்டுள்ளதாக திரிபோசா பெற்ற தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.காலாவதியான திரிபோஷா பொதிகள் விநியோகித்ததாக கூறப்படும் குடும்ப சுகாதார சேவை அதிகாரியிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த திரிபோஷா பொதிகளை வரும் வியாழன் அன்று மீள கொண்டு வருமாறு கூறியுள்ளார்.இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கேட்ட போது, இது ஒரு தவறு. அதற்காக வருந்துகிறோம். விநியோகித்தவுடன் காலாவதியாகி விட்டது என்பது பெரிய விடயம். அன்றைய தினம் திரிபோஷா விநியோகம் செய்யப்பட்ட வீடுகளுக்கு தெரியப்படுத்தி மாற்றி புதிய திரிபோஷம் வழங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது எழுத்துப்பிழையா அல்லது பழைய திரிபோஷாவா என்பதைச் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement