• Apr 08 2025

கடலூரில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் எற்றுமதி ஆரம்பம்

Chithra / Apr 7th 2025, 1:44 pm
image


கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளன. எனினும் 2002க்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

பின், சாகர் மாலா திட்டத்தில் இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயார் நிலையில் உள்ளது. 

அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சீமெந்து, வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. 

குறிப்பாக, பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும், 10ம் திகதி வெங்காயம் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

கடலூரில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் எற்றுமதி ஆரம்பம் கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளன. எனினும் 2002க்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின், சாகர் மாலா திட்டத்தில் இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயார் நிலையில் உள்ளது. அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சீமெந்து, வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. குறிப்பாக, பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும், 10ம் திகதி வெங்காயம் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement