ஆரம்ப தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடவும், கிரிக்கெட் போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நெலும் பொகுண திரையரங்கில் நடாத்திய 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், கொவிட் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் தவறவிடப்பட்ட பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை கடின உழைப்பினால் முறையாக நடத்தி முடிக்க முடிந்தது. இதன்படி, பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவை எதிர்வரும் சில மாதங்களில் பாடசாலைகளின் மைதானங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்றார்.
அத்துடன் புதிய தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், நல்ல ஆளுமையுடன் குழந்தைகளை வளர்ப்பது போன்ற தற்போதைய தலைப்புகளின் பின்னணியில் அந்த சர்வதேச போக்குகளைக் கவனித்து நமது கல்வி முறையும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் இங்கு கூறினார். அதன்படி, வளர்ந்த நாடுகளின் கல்வித் தரத்திற்கு ஏற்ப இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மாற்றத்தில் இலங்கையில் உள்ள பாடசாலைகள் கிரிக்கெட்டுக்கு முக்கிய இடத்தை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் ஆரம்ப தரத்தில் நடத்தப்படும் பரீட்சைகளின் தொகை குறைக்கப்பட்டு வகுப்பறையில் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பான கற்கை நடவடிக்கைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பக் கல்வியில் தேர்வு நடத்தும் முறையை விட பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். - கல்வி அமைச்சர் ஆலோசனை. ஆரம்ப தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடவும், கிரிக்கெட் போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நெலும் பொகுண திரையரங்கில் நடாத்திய 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், கொவிட் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் தவறவிடப்பட்ட பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை கடின உழைப்பினால் முறையாக நடத்தி முடிக்க முடிந்தது. இதன்படி, பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவை எதிர்வரும் சில மாதங்களில் பாடசாலைகளின் மைதானங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்றார். அத்துடன் புதிய தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், நல்ல ஆளுமையுடன் குழந்தைகளை வளர்ப்பது போன்ற தற்போதைய தலைப்புகளின் பின்னணியில் அந்த சர்வதேச போக்குகளைக் கவனித்து நமது கல்வி முறையும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் இங்கு கூறினார். அதன்படி, வளர்ந்த நாடுகளின் கல்வித் தரத்திற்கு ஏற்ப இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மாற்றத்தில் இலங்கையில் உள்ள பாடசாலைகள் கிரிக்கெட்டுக்கு முக்கிய இடத்தை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் எதிர்காலத்தில் ஆரம்ப தரத்தில் நடத்தப்படும் பரீட்சைகளின் தொகை குறைக்கப்பட்டு வகுப்பறையில் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பான கற்கை நடவடிக்கைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.