• Apr 26 2024

பேஸ்புக் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு..! வெளியான திடுக்கிடும் தகவல் samugammedia

Chithra / May 25th 2023, 5:36 pm
image

Advertisement

விதிகளை மீறி தகவல் கடத்தியதாக தெரிவித்து மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதத்தினை  ஐரோப்பிய அரசு விதித்துள்ளது. 

ஸ்மார்ட்போன் பயனர்களிடம் மிக அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் பேஸ்புக் , வாட்ஸாப் , இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கே  ஐரோப்பிய அரசு அபராதம் விதித்துள்ளது.

ஐரோப்பிய நாட்டின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம்,  ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. 

ஆனால் மெட்டா நிறுவனம் ஐரோப்பிய நாட்டின் பேஸ்புக் பயனர்களின் தரவுகளை அமெரிக்காவுக்கு மாற்றியதாக கூறப்படுகின்றது.

இந்த புகாரின் அடிப்படையில் மெட்டா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 10,767 கோடி ரூபாய் அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தகவல் பாதுகாப்பு சட்டத்தின் படி ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகையாக இது காணப்படுவதுடன், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மெட்டா நிறுவனமும் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதனுடன்  3வது  முறையாக மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

பேஸ்புக் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு. வெளியான திடுக்கிடும் தகவல் samugammedia விதிகளை மீறி தகவல் கடத்தியதாக தெரிவித்து மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதத்தினை  ஐரோப்பிய அரசு விதித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்களிடம் மிக அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் பேஸ்புக் , வாட்ஸாப் , இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கே  ஐரோப்பிய அரசு அபராதம் விதித்துள்ளது.ஐரோப்பிய நாட்டின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம்,  ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. ஆனால் மெட்டா நிறுவனம் ஐரோப்பிய நாட்டின் பேஸ்புக் பயனர்களின் தரவுகளை அமெரிக்காவுக்கு மாற்றியதாக கூறப்படுகின்றது.இந்த புகாரின் அடிப்படையில் மெட்டா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 10,767 கோடி ரூபாய் அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகவல் பாதுகாப்பு சட்டத்தின் படி ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகையாக இது காணப்படுவதுடன், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மெட்டா நிறுவனமும் அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் இதனுடன்  3வது  முறையாக மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement