• May 19 2024

ராஜபக்சக்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள்...!ஜனாதிபதிக்கு எதிராக பொருளாதார கொள்கை...! மொட்டுக் கட்சி அறிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 10:33 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார மீட்சிக்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் எனவும் இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை ஏற்பதா ? அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா ? என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பொதுஜன பெரமுன மீது மக்கள் வைத்த நம்பிக்கை பலவீனமடைய கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

அதேவேளை ராஜபக்சக்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

வரி சலுகை வழங்கியது தவறு என்ற குற்றச்சாட்டு எமது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தற்போது வரி விதிப்பு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது செயற்படுத்துகிறார்கள்.

திறந்த மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை முழுமையாக அமுல்படுத்தாமல் நடுநிலையான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டதை நாட்டு மக்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்சக்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள்.ஜனாதிபதிக்கு எதிராக பொருளாதார கொள்கை. மொட்டுக் கட்சி அறிவிப்பு.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பொருளாதார மீட்சிக்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் எனவும் இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை ஏற்பதா அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.பொதுஜன பெரமுன மீது மக்கள் வைத்த நம்பிக்கை பலவீனமடைய கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.அதேவேளை ராஜபக்சக்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.வரி சலுகை வழங்கியது தவறு என்ற குற்றச்சாட்டு எமது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.தற்போது வரி விதிப்பு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது செயற்படுத்துகிறார்கள்.திறந்த மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை முழுமையாக அமுல்படுத்தாமல் நடுநிலையான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டதை நாட்டு மக்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement