• May 06 2024

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திரயான்3 நிலவுத் தரையிறக்கம்...! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 10:15 am
image

Advertisement

சந்திரனின் தென் முனையில் சந்திரயான்3 மூலம் வரலாற்று ரீதியிலானதொரு நிலவுத் தரையிறக்கத்தை அடைந்தமைக்காக இந்தியாவுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளடங்கலாக வல்லரசு நாடுகளின் பங்களிப்பானது விண்வெளி ஆராய்ச்சியில் இருக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் இச்சாதனையானது தனித்து நிற்கிறது. ஏனெனில், நிலவின் தென் முனையில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதலாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இம்மைற்கல்லானது இந்தியாவின் நீண்டகால விஞ்ஞான, தொழில்நுட்ப மேம்பாட்டை பறைசாற்றுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு இம் முயற்சியில் வெற்றி அடைந்தமை இந்தியாவின் சாரனையைமேலும் சிறப்பாக்குகிறது. வளப்பற்றாக்குறையுள்ள சூழல்களிலிருந்தும் உறுதிப்பாடு, புத்தாக்கம்(innovation)  மூலம் உயர்ந்த மட்டத்தை அடையும் இந்தியாவின் தன்மையை சந்திரயான் – 3 கோட்டிட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேலின் தலைமையின் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க.   இந் நிகழ்வுகுறிபிடத்தக்கதொன்றாகும். இயக்குநர் வீரமுத்துவேல் அவர்களின் பங்களிப்பு உலகெங்கிலுமுள்ளதமிழர்களை பெருமையடையச் செய்கின்றது. இவரது வகிபாகமானது இந்தியாவின் பன்முகத் தன்மையைஅடையாளப்படுத்துகின்றது. முந்தைய இரண்டு சந்திராயன் திட்டங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளாலேயே தலைமை தாங்கப்பட்டிருந்தன.

வெற்றிகரமான சந்திரத் தரையிறக்கமானது சர்வதேச ரீதியில் வல்லரசு நாடொன்றாக இந்தியா உயர்வதின்அடையாளமொன்றாகும். உலகில் ஐந்தாவது பாரிய பொருளாதாரமாகவும் ஏற்கெனவே தனது நிலையைஉறுதிப்படுத்தியுள்ள இந்தியா, முக்கியமானதொரு பூகோள மூலோபாய இராஜதந்திர சக்தியாகவும்வெளிப்பட்டு வருகின்றது.

ஐக்கிய அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான போட்டித்தன்மையும், தனதுதேசிய நலன்களையே முதன்மைப்படுத்துவதன் காரணமாகவும்,  எதிர்கால உலக விவகாரங்களை தீர்மானிப்பதில் இந்தியா  ஒரு முக்கிய சக்தியாக உள்ளது.

தற்போது இந்தியாவின் வல்லமையானது பூமிக்குஅப்பால் சென்றுள்ளதுடன், விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமானதொரு நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போன்று, “வானம் எல்லையல்ல என்பதை இந்தியா மீண்டும்மீண்டும் நிரூபிக்கிறது.” வெற்றிகரமான சந்திரத் தரையிறக்கமானது இந்தியாவின் எல்லைகளை நகர்த்தும், புதிய மைல்கற்களை அடையும் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்.  

எதிர்கால முயற்சிகளில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ஈழத் தமிழ் சமூகம் வாழ்த்துகிறது. இந்த வரலாற்றுமுக்கியத்துவமிக்க நிகழ்வு, உலக அரங்கில் இந்தியாவின் நிலையைப் பலப்படுத்துவதுடன், அதன்மக்களிடையேயும், உலகத் தமிழ் சமூகத்திலும்,  ஒற்றுமையயும், பெருமையையும் வளர்க்கிறது.

இந்த வரலாற்று ரீதியிலான சாதனைக்காக இந்தியாவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துவதுடன், இந்தியா தனது புத்தாக்கப் பயணத்தில் (Journey of innovation) மேலும் சாதனை மைல்கற்களை உருவாக்கும்என எதிர்பார்க்கின்றோம் என அவ்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திரயான்3 நிலவுத் தரையிறக்கம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து.samugammedia சந்திரனின் தென் முனையில் சந்திரயான்3 மூலம் வரலாற்று ரீதியிலானதொரு நிலவுத் தரையிறக்கத்தை அடைந்தமைக்காக இந்தியாவுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஐக்கிய அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளடங்கலாக வல்லரசு நாடுகளின் பங்களிப்பானது விண்வெளி ஆராய்ச்சியில் இருக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் இச்சாதனையானது தனித்து நிற்கிறது. ஏனெனில், நிலவின் தென் முனையில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதலாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இம்மைற்கல்லானது இந்தியாவின் நீண்டகால விஞ்ஞான, தொழில்நுட்ப மேம்பாட்டை பறைசாற்றுகிறது.மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு இம் முயற்சியில் வெற்றி அடைந்தமை இந்தியாவின் சாரனையைமேலும் சிறப்பாக்குகிறது. வளப்பற்றாக்குறையுள்ள சூழல்களிலிருந்தும் உறுதிப்பாடு, புத்தாக்கம்(innovation)  மூலம் உயர்ந்த மட்டத்தை அடையும் இந்தியாவின் தன்மையை சந்திரயான் – 3 கோட்டிட்டுக் காட்டுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேலின் தலைமையின் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க.   இந் நிகழ்வுகுறிபிடத்தக்கதொன்றாகும். இயக்குநர் வீரமுத்துவேல் அவர்களின் பங்களிப்பு உலகெங்கிலுமுள்ளதமிழர்களை பெருமையடையச் செய்கின்றது. இவரது வகிபாகமானது இந்தியாவின் பன்முகத் தன்மையைஅடையாளப்படுத்துகின்றது. முந்தைய இரண்டு சந்திராயன் திட்டங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளாலேயே தலைமை தாங்கப்பட்டிருந்தன.வெற்றிகரமான சந்திரத் தரையிறக்கமானது சர்வதேச ரீதியில் வல்லரசு நாடொன்றாக இந்தியா உயர்வதின்அடையாளமொன்றாகும். உலகில் ஐந்தாவது பாரிய பொருளாதாரமாகவும் ஏற்கெனவே தனது நிலையைஉறுதிப்படுத்தியுள்ள இந்தியா, முக்கியமானதொரு பூகோள மூலோபாய இராஜதந்திர சக்தியாகவும்வெளிப்பட்டு வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான போட்டித்தன்மையும், தனதுதேசிய நலன்களையே முதன்மைப்படுத்துவதன் காரணமாகவும்,  எதிர்கால உலக விவகாரங்களை தீர்மானிப்பதில் இந்தியா  ஒரு முக்கிய சக்தியாக உள்ளது. தற்போது இந்தியாவின் வல்லமையானது பூமிக்குஅப்பால் சென்றுள்ளதுடன், விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமானதொரு நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போன்று, “வானம் எல்லையல்ல என்பதை இந்தியா மீண்டும்மீண்டும் நிரூபிக்கிறது.” வெற்றிகரமான சந்திரத் தரையிறக்கமானது இந்தியாவின் எல்லைகளை நகர்த்தும், புதிய மைல்கற்களை அடையும் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்.  எதிர்கால முயற்சிகளில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ஈழத் தமிழ் சமூகம் வாழ்த்துகிறது. இந்த வரலாற்றுமுக்கியத்துவமிக்க நிகழ்வு, உலக அரங்கில் இந்தியாவின் நிலையைப் பலப்படுத்துவதுடன், அதன்மக்களிடையேயும், உலகத் தமிழ் சமூகத்திலும்,  ஒற்றுமையயும், பெருமையையும் வளர்க்கிறது.இந்த வரலாற்று ரீதியிலான சாதனைக்காக இந்தியாவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துவதுடன், இந்தியா தனது புத்தாக்கப் பயணத்தில் (Journey of innovation) மேலும் சாதனை மைல்கற்களை உருவாக்கும்என எதிர்பார்க்கின்றோம் என அவ்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement