• Nov 26 2024

தகாத உறவுகளால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரிப்பு!

Chithra / Aug 3rd 2024, 4:47 pm
image

  

தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன.

கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம்  22,584 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில், கணவர் மனைவி இருவருக்கும் இடையில் புரிந்துணர்வின்மை, உடலுறவின்மை, அன்பின்மை மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாகத் தகாத உறவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தகாத உறவுகளால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரிப்பு   தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன.கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம்  22,584 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இது தொடர்பில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில், கணவர் மனைவி இருவருக்கும் இடையில் புரிந்துணர்வின்மை, உடலுறவின்மை, அன்பின்மை மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாகத் தகாத உறவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement