• Dec 09 2024

அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! யாழில் சம்பவம்

Chithra / Sep 9th 2024, 4:03 pm
image


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்றையதினம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன. 

இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிசார் தடயங்களை சேகரித்தனர்.

மேலும்  மீட்கப்பட்டவரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்றையதினம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன. இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிசார் தடயங்களை சேகரித்தனர்.மேலும்  மீட்கப்பட்டவரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement