• Jan 04 2025

நெற் செய்கை அழிவு கணக்கெடுப்பில் விவசாயிகள் வஞ்சிப்பு- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு..!

Sharmi / Dec 28th 2024, 2:45 pm
image

கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது அழிவுகளை சந்தித்த நெற் செய்கை குறித்த அரச கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வஞ்சிக்காது பாகுபாடு காட்டாது அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த நாட்களில் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெருமளவு பெரும் போக நெற் செய்கையாளர்கள் நெல் அழிவைச் சந்தித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நஸ்டஈடுகள் வழங்குவதாக அமைச்சரவைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு கமநல நிலையங்கள் ஊடாக படிவங்கள் வழங்கப்படும் நிலையில், நெல் விதைப்பின் ஆரம்ப அழிவுகளை சந்தித்த விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு இடைப்பட்ட காலத்தில்அழிவைச் சந்தித்த விவசாயிகள் உள்வாங்கப்படுவதுடன் அவர்களின் முழுமையான அழிவிலும் அரைவாசிக்கு குறைவான நிலப்பரப்புக்களே பதியப்படுவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையுடன் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்ப அழிவை எதிர் கொண்ட விவசாயிகள் பலர் அடுத்த கட்ட நெல் விதைப்பை மேற் கொள்ள முடியாத நிலையில் பணம் இல்லாது தடுமாறுகின்றனர் காரணம் ஏற்கனவே கடன்படு நிலையில் தான் முதற்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 

நாட்டில் அரிசிக்கு ஏற்பட்ட பற்றாக்குறை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படாது தடுப்பதற்கு உள் நாட்டு உற்பத்தி மேலும் கூட்டப்பட வேண்டும்.

அதனடிப்படையில் அரசும், விவசாய அமைச்சும் அதன் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வஞ்சிக்காது பாகுபாடு காட்டாது பாதிப்பின் உண்மையை விரைவாக கள ஆய்வுக்கு உட்படுத்தி ஆரம்ப முளை அழிவு மற்றும் இடைக்கால அழிவு  இரண்டையும் பாதிப்பாக ஏற்று நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை மாகாண ஆளுநர் மற்றும் கமநல திணைக்கள அதிகாரிகள் முன்னேடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


நெற் செய்கை அழிவு கணக்கெடுப்பில் விவசாயிகள் வஞ்சிப்பு- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு. கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது அழிவுகளை சந்தித்த நெற் செய்கை குறித்த அரச கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வஞ்சிக்காது பாகுபாடு காட்டாது அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கடந்த நாட்களில் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெருமளவு பெரும் போக நெற் செய்கையாளர்கள் நெல் அழிவைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நஸ்டஈடுகள் வழங்குவதாக அமைச்சரவைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு கமநல நிலையங்கள் ஊடாக படிவங்கள் வழங்கப்படும் நிலையில், நெல் விதைப்பின் ஆரம்ப அழிவுகளை சந்தித்த விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு இடைப்பட்ட காலத்தில்அழிவைச் சந்தித்த விவசாயிகள் உள்வாங்கப்படுவதுடன் அவர்களின் முழுமையான அழிவிலும் அரைவாசிக்கு குறைவான நிலப்பரப்புக்களே பதியப்படுவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையுடன் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.ஆரம்ப அழிவை எதிர் கொண்ட விவசாயிகள் பலர் அடுத்த கட்ட நெல் விதைப்பை மேற் கொள்ள முடியாத நிலையில் பணம் இல்லாது தடுமாறுகின்றனர் காரணம் ஏற்கனவே கடன்படு நிலையில் தான் முதற்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அரிசிக்கு ஏற்பட்ட பற்றாக்குறை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படாது தடுப்பதற்கு உள் நாட்டு உற்பத்தி மேலும் கூட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் அரசும், விவசாய அமைச்சும் அதன் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வஞ்சிக்காது பாகுபாடு காட்டாது பாதிப்பின் உண்மையை விரைவாக கள ஆய்வுக்கு உட்படுத்தி ஆரம்ப முளை அழிவு மற்றும் இடைக்கால அழிவு  இரண்டையும் பாதிப்பாக ஏற்று நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை மாகாண ஆளுநர் மற்றும் கமநல திணைக்கள அதிகாரிகள் முன்னேடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement