• Sep 17 2024

வடக்கு கடலை ஆக்கிரமிக்கும் பண்ணைகள்; மீன் இனங்களை எதிர்கால சந்ததியினர் கண்காட்சியில் தான் பார்க்க முடியும்! samugammedia

Chithra / Jun 25th 2023, 9:14 am
image

Advertisement

அட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால் எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில் தான் காட்ட முடியும் என மெசிடோ நிறுவனத்தின் உத்தியோத்தார் விவேகி தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக வங்கியின் அறிக்கை தொடர்பான கடத்தொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கில் வளமான கடற் பகுதிகளில் கடல் வேளாண்மை என்ற பெயரில் அட்டை பண்ணைகள் விரிவுபடுத்தப்படுகிறது.

பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் மாற்றுத் தொழில்களுக்கு செல்ல வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மீன இனங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத அளவுக்கு கடலானது சேற்றுக் கடலாக மாற்றும்  நிலையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு மீன் இனங்களை காட்ட முடியாத சூழ்நிலை உருவாகும்.

தற்போது அலங்கார மீன்கள் கண்காட்சிக்காக வைக்கப்படும் நிலையில் நாம் பாரம்பரியமாக கடல் உணவாக உண்டு வந்த மீன்களை மீன் கண்காட்சிகளில் தான் எமது எதிர்கால சந்ததியினருக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படப்போகிறது.

மீன் உற்பத்திக்கு கருவாட்டு உற்பத்திக்கு பெயர் போன மன்னார் மாவட்டத்தில் கோழிகளுக்கு உணவாக போடுகின்ற மண்டத்திரலி மற்றும் செங்கன்னியை உணவு தேவைக்காக இன்று மக்கள் பயன்படுத்துகின்றனர்.


அது மட்டுமல்லாது சீனாவில் இருந்து பிளாஸ்டிக் முட்டைகள் இறக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் சீனா செயற்கை மீன்களையும்  உணவுக்காக உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.

வடக்கில் இயற்கையாகக் மீன் இனங்கள் கிடைக்கும் கடற் பகுதிகளை ஆக்கிரமித்து தனது நாட்டுக்கு தேவையான அட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிலையில் எமது மக்கள் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை உணவாக உட்கொள்கின்றனர்.

இயற்கை நீரோட்டங்களை மறித்து கடல் அட்டைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதால்  மீன் இனப்பெருக்கம் குறைவடைந்துள்ள நிலையில் பிடிபடும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஆடம்பர விடுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

ஆகவே வடபகுதியில் மட்டுமல்ல இலங்கையிலும் யாரும் உணவு தேவைக்காக பயன்படுத்தாத கடல் அட்டையை டொலரைப் பெறப் போகுறோம் எனக் கூறி அந்நிய நாட்டவர்களுக்கு எமது கடல் வளத்தை   அழிக்க இடம் கொடுக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.


வடக்கு கடலை ஆக்கிரமிக்கும் பண்ணைகள்; மீன் இனங்களை எதிர்கால சந்ததியினர் கண்காட்சியில் தான் பார்க்க முடியும் samugammedia அட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால் எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில் தான் காட்ட முடியும் என மெசிடோ நிறுவனத்தின் உத்தியோத்தார் விவேகி தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக வங்கியின் அறிக்கை தொடர்பான கடத்தொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் வளமான கடற் பகுதிகளில் கடல் வேளாண்மை என்ற பெயரில் அட்டை பண்ணைகள் விரிவுபடுத்தப்படுகிறது.பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் மாற்றுத் தொழில்களுக்கு செல்ல வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மீன இனங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத அளவுக்கு கடலானது சேற்றுக் கடலாக மாற்றும்  நிலையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு மீன் இனங்களை காட்ட முடியாத சூழ்நிலை உருவாகும்.தற்போது அலங்கார மீன்கள் கண்காட்சிக்காக வைக்கப்படும் நிலையில் நாம் பாரம்பரியமாக கடல் உணவாக உண்டு வந்த மீன்களை மீன் கண்காட்சிகளில் தான் எமது எதிர்கால சந்ததியினருக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படப்போகிறது.மீன் உற்பத்திக்கு கருவாட்டு உற்பத்திக்கு பெயர் போன மன்னார் மாவட்டத்தில் கோழிகளுக்கு உணவாக போடுகின்ற மண்டத்திரலி மற்றும் செங்கன்னியை உணவு தேவைக்காக இன்று மக்கள் பயன்படுத்துகின்றனர்.அது மட்டுமல்லாது சீனாவில் இருந்து பிளாஸ்டிக் முட்டைகள் இறக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் சீனா செயற்கை மீன்களையும்  உணவுக்காக உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.வடக்கில் இயற்கையாகக் மீன் இனங்கள் கிடைக்கும் கடற் பகுதிகளை ஆக்கிரமித்து தனது நாட்டுக்கு தேவையான அட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிலையில் எமது மக்கள் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை உணவாக உட்கொள்கின்றனர்.இயற்கை நீரோட்டங்களை மறித்து கடல் அட்டைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதால்  மீன் இனப்பெருக்கம் குறைவடைந்துள்ள நிலையில் பிடிபடும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஆடம்பர விடுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.ஆகவே வடபகுதியில் மட்டுமல்ல இலங்கையிலும் யாரும் உணவு தேவைக்காக பயன்படுத்தாத கடல் அட்டையை டொலரைப் பெறப் போகுறோம் எனக் கூறி அந்நிய நாட்டவர்களுக்கு எமது கடல் வளத்தை   அழிக்க இடம் கொடுக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement