• Jan 11 2025

பிள்ளைகளுக்கு மீன் பனிஸ் வாங்கிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி - தென்னிலங்கையில் சம்பவம்

Chithra / Jan 9th 2025, 7:00 am
image

 

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர் ஒன்றின் பாகங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் நேற்று காலை தனது பிள்ளைகளுக்காக மீன் பனிஸ்  கொள்வனவு செய்துள்ளார்.

இளைய மகன் மீன் பனிஸின் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​அதில் லைட்டரின் உலோக துண்டுகள் இருந்துள்ளன.

இந்நிலையில், அது தொடர்பில் மஞ்சுள பெரேரா பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.

அவரின் ஆலோசனைக்கு அமைய, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றதாகவும் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மஞ்சுள தெரிவித்தார்.

இது தொடர்பில் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஈஷா மஹிந்ததா தெரிவிக்கையில், 

சம்பவம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு நபர் மீன் பன்னுடன் வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளுக்கு மீன் பனிஸ் வாங்கிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி - தென்னிலங்கையில் சம்பவம்  பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர் ஒன்றின் பாகங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் நேற்று காலை தனது பிள்ளைகளுக்காக மீன் பனிஸ்  கொள்வனவு செய்துள்ளார்.இளைய மகன் மீன் பனிஸின் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​அதில் லைட்டரின் உலோக துண்டுகள் இருந்துள்ளன.இந்நிலையில், அது தொடர்பில் மஞ்சுள பெரேரா பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.அவரின் ஆலோசனைக்கு அமைய, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றதாகவும் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மஞ்சுள தெரிவித்தார்.இது தொடர்பில் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஈஷா மஹிந்ததா தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.ஆனால் ஒரு நபர் மீன் பன்னுடன் வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement