• Apr 17 2025

புத்தாண்டுக்காக வந்த மகளை அழைத்து வர சென்ற தந்தை பலி - யாழில் துயரம்

Thansita / Apr 13th 2025, 11:18 pm
image

புத்தாண்டு விடுமுறைக்காக வந்த மகளை அழைத்துவரச் சென்ற தந்தை விபத்தில் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள்  புத்தாண்டு விடுமுறைக்காக அவரை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்றையதினம் அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம்  சென்ற மகளை அழைத்துச் செல்வதற்காக, குறித்த நபர் அதிகாலையில்  யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

 மழையின் காரணத்தால் , பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டுக்காக வந்த மகளை அழைத்து வர சென்ற தந்தை பலி - யாழில் துயரம் புத்தாண்டு விடுமுறைக்காக வந்த மகளை அழைத்துவரச் சென்ற தந்தை விபத்தில் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள்  புத்தாண்டு விடுமுறைக்காக அவரை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.புன்னாலைக்கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்றையதினம் அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம்  சென்ற மகளை அழைத்துச் செல்வதற்காக, குறித்த நபர் அதிகாலையில்  யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.  மழையின் காரணத்தால் , பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement