• Nov 23 2024

தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு..!

Chithra / Mar 31st 2024, 3:33 pm
image

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அஞ்சலி நிகழ்வில் விசேடமாக நினைவுப்பேருரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அ.கண்ணேராஜ் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் மகளிர், இளைஞர் அணி உறுப்பினர்கள், மாவட்ட கிளை,பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.


தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.  இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் நடைபெற்றது.இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அஞ்சலி நிகழ்வில் விசேடமாக நினைவுப்பேருரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அ.கண்ணேராஜ் நிகழ்த்தினார்.இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் மகளிர், இளைஞர் அணி உறுப்பினர்கள், மாவட்ட கிளை,பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement