• Jun 30 2024

பெப்ரவரி4 தமிழர் தேசத்தின் கரிநாள்: யாழின் முக்கிய இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

Sharmi / Feb 4th 2023, 11:14 am
image

Advertisement

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு  பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இருப்பினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பெப்ரவரி4 தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப்பொருளில்  தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழிலிருந்து போரணியாக யாழ் மாவட்ட செயலகத்திற்கு வந்தடைந்து மாவட்ட செயலகத்தின் முன்னால் குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற  உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பெப்ரவரி4 தமிழர் தேசத்தின் கரிநாள்: யாழின் முக்கிய இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு  பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இருப்பினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பெப்ரவரி4 தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப்பொருளில்  தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழிலிருந்து போரணியாக யாழ் மாவட்ட செயலகத்திற்கு வந்தடைந்து மாவட்ட செயலகத்தின் முன்னால் குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற  உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement