• Jul 01 2024

சிறீதரன் எம்.பியின் குடுப்பத்தை அச்சுறுத்திய மர்ம நபர்கள்!

Tamil nila / Jun 28th 2024, 9:36 pm
image

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வசிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்றையதினம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. 

இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று காலை யாழ் இந்துக்கல்லூரியை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் இவ்வாறான அச்சுறுத்தும் வகையிலான குழுக்களின் நடமாட்டம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.



சிறீதரன் எம்.பியின் குடுப்பத்தை அச்சுறுத்திய மர்ம நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வசிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்றையதினம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை யாழ் இந்துக்கல்லூரியை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் இவ்வாறான அச்சுறுத்தும் வகையிலான குழுக்களின் நடமாட்டம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement