நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை வழங்கி, விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகள் உச்ச பலனடையும் முகமாக விவசாய திணைக்களம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளில் ஒன்றான வயல் விழா கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.
பரசூட் முறையில் Bg 366 வெள்ளை இன நெல் நடுகை செய்யப்பட்ட வயல் அறுவடை விழா தர்மபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவின் தர்மபுரம் கிழக்கு பகுதியில் நடைபெற்றது.
தர்மபுரம் பகுதிக்குரிய விவசாய போதனாசிரியர் க.சரணியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற வயல்விழா நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை வழங்கி, விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகள் உச்ச பலனடையும் முகமாக விவசாய திணைக்களம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளில் ஒன்றான வயல் விழா கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. பரசூட் முறையில் Bg 366 வெள்ளை இன நெல் நடுகை செய்யப்பட்ட வயல் அறுவடை விழா தர்மபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவின் தர்மபுரம் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. தர்மபுரம் பகுதிக்குரிய விவசாய போதனாசிரியர் க.சரணியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.