• May 02 2024

புலம் பெயர் தமிழர்களிடம் பாரிய திட்டங்கள் உள்ளன - டாக்டர் வி.ஜி சந்தோசம் கருத்து.!

Sharmi / Feb 1st 2023, 12:17 pm
image

Advertisement

இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகள், யாழ்ப்பாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற பல திட்டங்களை கொண்டுள்ளதாக விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி சந்தோசம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு பல விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்தப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும் எனப் பல திட்டங்களையும் புலம் பெயர் தமிழர்கள் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்போது யாழ்பாணத்தின் வளர்ச்சி போக்கினை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழர்கள் என்ற தன்னம்பிக்கையுடன் யாவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இலங்கையில் கடற்கரையோரத்தில் 50 அல்லது 100 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்படுமிடத்து தங்கக் கடற்கரைச் செயற்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புலம் பெயர் தமிழர்களிடம் பாரிய திட்டங்கள் உள்ளன - டாக்டர் வி.ஜி சந்தோசம் கருத்து. இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகள், யாழ்ப்பாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற பல திட்டங்களை கொண்டுள்ளதாக விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி சந்தோசம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு பல விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்தப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அத்துடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும் எனப் பல திட்டங்களையும் புலம் பெயர் தமிழர்கள் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்போது யாழ்பாணத்தின் வளர்ச்சி போக்கினை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே தமிழர்கள் என்ற தன்னம்பிக்கையுடன் யாவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.இலங்கையில் கடற்கரையோரத்தில் 50 அல்லது 100 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்படுமிடத்து தங்கக் கடற்கரைச் செயற்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement