• Apr 26 2024

நீரில் மூழ்கியுள்ள நெல் வயல்கள் - இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Tamil nila / Feb 2nd 2023, 3:17 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வாநிலை காரணமாக தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் காலபோக அறுவடை  பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


அத்துடன் நெல்லிற்கான கேள்வி குறைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செய்கையை அறுவடை செய்ய முடியாத நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்த நிலையில், விவசாயிகளிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரிய தரப்பு விரைந்து செயற்பட வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குறிப்பாக, கமநல காப்புறுதிசபையானது விரைந்து நீரினால் மூடப்பட்டுள்ள வயல் நிலைகளை பார்வையிட்டு அதற்கான நிவாரணங்களை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் முத்து சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் கமநல காப்புறுதிசபையின் ஆணையாளருக்கு இது தொடர்பான அறிவித்தலை விரைவில் விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரில் மூழ்கியுள்ள நெல் வயல்கள் - இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் விடுத்துள்ள வேண்டுகோள் கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வாநிலை காரணமாக தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் காலபோக அறுவடை  பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.அத்துடன் நெல்லிற்கான கேள்வி குறைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செய்கையை அறுவடை செய்ய முடியாத நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த நிலையில், விவசாயிகளிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரிய தரப்பு விரைந்து செயற்பட வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிப்பாக, கமநல காப்புறுதிசபையானது விரைந்து நீரினால் மூடப்பட்டுள்ள வயல் நிலைகளை பார்வையிட்டு அதற்கான நிவாரணங்களை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் முத்து சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் கமநல காப்புறுதிசபையின் ஆணையாளருக்கு இது தொடர்பான அறிவித்தலை விரைவில் விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement