• May 02 2024

உலக கிண்ண கால்பந்து - பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவு

Chithra / Dec 15th 2022, 7:25 am
image

Advertisement

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதிக் கொண்டன.

போட்டியழன் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Theo Hernández முதல் கோல் அடித்தார்.

அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 1 - 0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி சார்பில் போட்டியின் 79 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Randal Kolo Muani கோல் அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்க மொரோக்கோ அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

அதனடிப்படையில் போட்டி முடிவில் 2 - 0 என பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி ஆர்ஜன்டீனா அணியை எதிர் கொள்ளவுள்ளது.

உலக கிண்ண கால்பந்து - பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது.இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதிக் கொண்டன.போட்டியழன் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Theo Hernández முதல் கோல் அடித்தார்.அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 1 - 0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி சார்பில் போட்டியின் 79 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Randal Kolo Muani கோல் அடித்தார்.இதற்கு பதிலடி கொடுக்க மொரோக்கோ அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.அதனடிப்படையில் போட்டி முடிவில் 2 - 0 என பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.அதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி ஆர்ஜன்டீனா அணியை எதிர் கொள்ளவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement