• May 03 2024

துப்பாக்கிச்சூடு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 7:46 pm
image

Advertisement

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.

இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


துப்பாக்கிச்சூடு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் SamugamMedia பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement