• May 09 2024

கனடாவில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி விஜயாலயனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு! samugammedia

Chithra / Jun 19th 2023, 10:49 am
image

Advertisement

முல்லைத்தீவு முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் கனடா நாட்டின் பொலீஸ் உயர் அதிகாரியாகவும் இருந்து விபத்தின் போது உயிரிழந்த மதியழகன் விஜயாலயனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 15.06.23 அன்று முள்ளியவளை  பூதன் வயல் பகுதியில் நடைபெற்றுள்ளது.

முள்ளியவளையில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து கனடா நாட்டின் ஒட்டாவா மாநிலத்தில் அன்நாட்டு இராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு சேவையாற்றி பின்னர் காவல்துறையில் இணைந்து மக்களுக்கு  சேவையாற்றிக்கொண்டிருந்போது 14.06.2022 அன்று இடம்பெற்ற விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.

இவரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு முள்ளியவளை பூதன் வயல் நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாடுகளுடன் நடைபெற்றுள்ளது.

ந.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி வணக்க நிகழ்வில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மாணவர்கள் பொதுமக்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது உயிரிழந்த கனேடிய பொலீஸ் அதிகாரி ம.விஜயாலயனின் படிப்பு, திறமைகள் அவரின் செயற்பாடுகள் தொடர்பில் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்குடன் நினைவுரைகள் இடம்பெற்றுள்ளதை அவர் நினைவாக தொடர்;நது ஆலயத்தில் மதிய அன்னதான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.


கனடாவில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி விஜயாலயனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு samugammedia முல்லைத்தீவு முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் கனடா நாட்டின் பொலீஸ் உயர் அதிகாரியாகவும் இருந்து விபத்தின் போது உயிரிழந்த மதியழகன் விஜயாலயனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 15.06.23 அன்று முள்ளியவளை  பூதன் வயல் பகுதியில் நடைபெற்றுள்ளது.முள்ளியவளையில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து கனடா நாட்டின் ஒட்டாவா மாநிலத்தில் அன்நாட்டு இராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு சேவையாற்றி பின்னர் காவல்துறையில் இணைந்து மக்களுக்கு  சேவையாற்றிக்கொண்டிருந்போது 14.06.2022 அன்று இடம்பெற்ற விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.இவரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு முள்ளியவளை பூதன் வயல் நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாடுகளுடன் நடைபெற்றுள்ளது.ந.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி வணக்க நிகழ்வில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மாணவர்கள் பொதுமக்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகள் இடம்பெற்றுள்ளன.இதன்போது உயிரிழந்த கனேடிய பொலீஸ் அதிகாரி ம.விஜயாலயனின் படிப்பு, திறமைகள் அவரின் செயற்பாடுகள் தொடர்பில் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்குடன் நினைவுரைகள் இடம்பெற்றுள்ளதை அவர் நினைவாக தொடர்;நது ஆலயத்தில் மதிய அன்னதான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement