• Dec 04 2024

வேகமாக அதிகரிக்கும் மீன் மற்றும் மரக்கறிகளின் விலைகள்!

Chithra / Dec 4th 2024, 8:40 am
image


கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மீன்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், 

கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததே இந்த நிலைக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகப் பயிர் செய்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் பல மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

இதன்படி ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட் கிலோவொன்றின் மொத்த விலை 60 முதல் 120 ரூபாவாகும். 

லீக்ஸ் கிலோ 150 முதல் 170 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

தக்காளி 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும், பச்சை மிளகாய் 190 முதல் 200 இடைப்பட்ட விலையிலும், கத்தரிக்காய் கிலோவொன்று 200 ரூபாவிற்கும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேகமாக அதிகரிக்கும் மீன் மற்றும் மரக்கறிகளின் விலைகள் கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மீன்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றது.இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததே இந்த நிலைக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகப் பயிர் செய்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் பல மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன்படி ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதேவேளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட் கிலோவொன்றின் மொத்த விலை 60 முதல் 120 ரூபாவாகும். லீக்ஸ் கிலோ 150 முதல் 170 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும், பச்சை மிளகாய் 190 முதல் 200 இடைப்பட்ட விலையிலும், கத்தரிக்காய் கிலோவொன்று 200 ரூபாவிற்கும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement