• May 20 2024

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்! பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிப்பு samugammedia

Chithra / Apr 3rd 2023, 9:07 am
image

Advertisement

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை பொலீசார் போராட்டகாரர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து என கோசங்கள் எழுப்பப்படுகின்றன

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிப்பு samugammedia யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை பொலீசார் போராட்டகாரர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து என கோசங்கள் எழுப்பப்படுகின்றனபோராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement