• Apr 17 2026

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு

dorin / Apr 16th 2026, 6:25 pm
image

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றையும் அதில் இருந்த 4 சந்தேகநபர்களையும் கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். 

இலங்கை கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

குறித்த நெடுநாள் படகு, சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றையும் அதில் இருந்த 4 சந்தேகநபர்களையும் கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இலங்கை கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த நெடுநாள் படகு, சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement