• May 03 2024

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்...!இன்று முதல் அமுலுக்கு...!samugammedia

Sharmi / Oct 16th 2023, 8:52 am
image

Advertisement

ஜனாதிபதி சீனாவிற்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளை மேற்பார்வை செய்வதற்காக இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று(16) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதி பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராகவும், அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் மற்றும் சமூக சேவைகள் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதில் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் இடம்பெற்றுவரும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது Belt and Road மாநாட்டில் பங்கேற்றப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (15) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்.இன்று முதல் அமுலுக்கு.samugammedia ஜனாதிபதி சீனாவிற்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளை மேற்பார்வை செய்வதற்காக இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இன்று(16) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, பிரதி பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராகவும், அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் மற்றும் சமூக சேவைகள் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதில் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் இடம்பெற்றுவரும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது Belt and Road மாநாட்டில் பங்கேற்றப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (15) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement