மெட்டா நிறுவனம் சமீபத்தில் புதிய ஏ.ஐ. அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் வாட்ஸ்அப் செயலிக்கான ஏ.ஐ. ஸ்டிக்கர்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இதற்கான அம்சம் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்து நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த வலைத்தள பதிவில், ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Llama 2 மற்றும் Emu போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மெட்டா நிறுவனத்தின் ஏ.ஐ. டூல் எழுத்துக்களை அதிக தரமுள்ள ஸ்டிக்கர்களாக உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்க ஆங்கில மொழியில் வாக்கியங்களை வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த புதிய அம்சம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரி உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.
வட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia மெட்டா நிறுவனம் சமீபத்தில் புதிய ஏ.ஐ. அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.இதில் வாட்ஸ்அப் செயலிக்கான ஏ.ஐ. ஸ்டிக்கர்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது.இதற்கான அம்சம் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்து நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்த வலைத்தள பதிவில், ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.Llama 2 மற்றும் Emu போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மெட்டா நிறுவனத்தின் ஏ.ஐ. டூல் எழுத்துக்களை அதிக தரமுள்ள ஸ்டிக்கர்களாக உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.வாட்ஸ்அப் செயலியில் ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்க ஆங்கில மொழியில் வாக்கியங்களை வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.இந்த புதிய அம்சம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரி உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.