• Sep 17 2024

கட்டுநாயக்கவில் இருந்து இன்று பெண் விமானிகளுடன் மட்டும் பறந்த விமானம்! SamugamMedia

Chithra / Mar 8th 2023, 2:25 pm
image

Advertisement

பெண் விமானிகள் மற்றும் பெண்களை மட்டுமே கொண்ட விமானக் குழு உறுப்பினர்களுடன் இந்தியாவின் திருச்சிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானமொன்றை அனுப்பியது

சர்வதேச மகளிர் தினத்தை   கொண்டாடும் வகையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இன்று (08) காலை இவ்வாறு விமானமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஏ-320 எயார்பஸ் ரக விமானம் அனுப்பப்பட்டதுடன், கப்டன் சாமிக்க ரூபசிங்க பிரதான விமானியாகவும், பிமாலி ஜீவந்தர துணை விமானியாக இருந்தார்.

இது தவிர, விமான பணியாளர்கள் என 05 பெண் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்களில் விமான நடவடிக்கைகளின் பிரதானி ரோஷனி திஸாநாயக்க, கேபின் மேற்பார்வையாளர் உபுலி வர்ணகுல, விமானப் பணிப்பெண் லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் அடங்குவர்.

இன்று காலை 08.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-131 இல் இந்தியாவின் திருச்சிக்கு 67 பயணிகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த பெண் விமானிகள் மற்றும் பெண் ஊழியர்கள் இன்றிரவு 11.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-132 இல் 61 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் திருச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.


கட்டுநாயக்கவில் இருந்து இன்று பெண் விமானிகளுடன் மட்டும் பறந்த விமானம் SamugamMedia பெண் விமானிகள் மற்றும் பெண்களை மட்டுமே கொண்ட விமானக் குழு உறுப்பினர்களுடன் இந்தியாவின் திருச்சிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானமொன்றை அனுப்பியதுசர்வதேச மகளிர் தினத்தை   கொண்டாடும் வகையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இன்று (08) காலை இவ்வாறு விமானமொன்றை அனுப்பிவைத்துள்ளது.ஏ-320 எயார்பஸ் ரக விமானம் அனுப்பப்பட்டதுடன், கப்டன் சாமிக்க ரூபசிங்க பிரதான விமானியாகவும், பிமாலி ஜீவந்தர துணை விமானியாக இருந்தார்.இது தவிர, விமான பணியாளர்கள் என 05 பெண் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்களில் விமான நடவடிக்கைகளின் பிரதானி ரோஷனி திஸாநாயக்க, கேபின் மேற்பார்வையாளர் உபுலி வர்ணகுல, விமானப் பணிப்பெண் லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் அடங்குவர்.இன்று காலை 08.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-131 இல் இந்தியாவின் திருச்சிக்கு 67 பயணிகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.இந்த பெண் விமானிகள் மற்றும் பெண் ஊழியர்கள் இன்றிரவு 11.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-132 இல் 61 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் திருச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement