• May 03 2024

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட போடைஸ் பகுதியில் வெள்ளம் - தொழிலாளர்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில்...!samugammedia

Anaath / Nov 4th 2023, 10:23 am
image

Advertisement

நேற்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் பெய்த மழையால் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள போடைஸ் பகுதியில் உள்ள காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 6 வீடுகள் நீரில் மூழ்கியது.

இதனால் அங்கு உள்ள மக்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த 30 ஆண்டு காலம் இவ்வாறு வெள்ளம் ஏற்படுகிறது.

இது குறித்து நோர்வூட் பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் அறிவித்த போதும் தோட்ட நிர்வாகம் இந்த ஆற்றை அகல படுத்த அனுமதி வழங்க மறுக்கிறது.

இருந்த போதும் ஆறு மாதங்களுக்கு முன்பு பிரதேச செயலாளர் ஊடாக இந்த ஆற்றை அகல படுத்த நடவடிக்கை எடுக்க பட்ட நிலையில் அதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வில்லை.

தோட்ட நிர்வாகம் ஏற்படுத்தும் தடை காரணமாக மழை காலங்களில் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் போடைஸ் வீதி வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட போடைஸ் பகுதியில் வெள்ளம் - தொழிலாளர்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில்.samugammedia நேற்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் பெய்த மழையால் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள போடைஸ் பகுதியில் உள்ள காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 6 வீடுகள் நீரில் மூழ்கியது.இதனால் அங்கு உள்ள மக்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த 30 ஆண்டு காலம் இவ்வாறு வெள்ளம் ஏற்படுகிறது.இது குறித்து நோர்வூட் பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் அறிவித்த போதும் தோட்ட நிர்வாகம் இந்த ஆற்றை அகல படுத்த அனுமதி வழங்க மறுக்கிறது.இருந்த போதும் ஆறு மாதங்களுக்கு முன்பு பிரதேச செயலாளர் ஊடாக இந்த ஆற்றை அகல படுத்த நடவடிக்கை எடுக்க பட்ட நிலையில் அதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வில்லை.தோட்ட நிர்வாகம் ஏற்படுத்தும் தடை காரணமாக மழை காலங்களில் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் போடைஸ் வீதி வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement